பாரத லக்ஷமனின் கொலை வழக்கு! நீதிபதிகளின் தீர்ப்பு விபரங்கள்

446 0

00-700x467முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை வழக்கின் தீர்ப்பின்போது மேல்நீதிமன்ற நீதிபதிகளில் இருவர் வழங்கிய தீர்ப்பும் மூன்றாமவர் வழங்கிய தீர்ப்பும் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்மினி என் ரணவக்க மற்றும் எம்சிபி எஸ் மோரிஸ் ஆகிய நீதிபதிகள் தமது தீர்ப்பின் போது 4 பேரின் கொலை உட்பட்ட 17 குற்றச்சாட்டுக்களில் துமிந்த சில்வா உட்பட்ட ஐந்து பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.

அதிலும் குறித்த சம்பவத்தின் போது துமிந்த சில்வா நடந்துக்கொண்ட விதம், அத்துடன் குழுவுக்கு தலைமை தாங்கியமை என்பவற்றை கொண்டு அவரே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேநேரம் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி சம்பவ நேரம் துமிந்த சில்வா, மது அருந்தியிருந்தமையையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனினும் மூன்றாவது நீதிபதியான ஷிரான் குணரட்ன, துமிந்த சில்வாவின் மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்தார்.

விசாரணை அதிகாரிகளின் முரண்பட்ட அறிக்கைகளை பார்க்கும்போது சந்தேகங்களின் அனுகூலங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் துமிந்த சில்வா உட்பட்ட ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என்று அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.