20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தில் பிரதமர் தெரிவு தொடர்பிலும் விதிமுறைகள்-மக்கள் விடுதலை முன்னணி

192 0

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது பிரதமர் தெரிவு தொடர்பிலும் இரு வழிமுறைகளை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்துக்கு பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்யும் போது குறித்த நபர் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்கைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும், அவ்வாறில்லாத போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment