யானை தாக்கியதில் ஒருவர் பலி

21 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று (05) மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த நா.சங்கரப்பிள்ளை என்ற 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் காரமலை பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புகளை செய்துவரும் நிலையில் அங்கு சென்றபோது காட்டுப்பகுதியில் இருந்த யானை இவரை தாக்கியுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.