ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை திருடிய மூன்று சந்தேகநபர்கள் பேருவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரத்தினக் கற்களை மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியை காண்பித்து இரத்தினக் கற்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக பேருவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இரத்தினக் கற்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 24, 31 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

