தேயிலை நிலங்களை பதிவு செய்வது சம்பந்தமான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை கூறியுள்ளது.
அதன் தகவல்களை அடிப்படையாக கொண்டு கிராம மட்டத்தில் தேயிலை நிலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க கூறினார்.
அந்த ஆவணங்களை பயன்படுத்தி அடுத்த ஆண்டு முதல் தேயிலை நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் அடுத்த ஆண்டை ´பயிரிடும் ஆண்டு´ என பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக வெற்று நிலங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
தேயிலை கொழுந்து அறுவடையை மேம்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு வணிகக் கடன் பெற்றுக்கௌ்ள வசதி ஏற்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அரச துறையால் நலத்திடங்களை வழங்குதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்தார்.

