நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த அமைச்சரவை மாற்றத்தை இறுதியான அமைச்சரவை மாற்றமாக கருதி எதிர்வரும் காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்மிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உழைப்போம் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சின் பொறுப்புக்களை கையேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
தேர்தல் முடிவுகளின் பின்னர் பல்வேறு கருத்து முரண்பாடுகளினால் ஏற்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் வீணடிக்கப்பட்ட காலம் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டியது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

