புதிய அமைச்சரவை நியமனம் நேற்றும், இன்றும்

255 0

புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றும், இன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கமைய நேற்றைய தினம் 18 அமைச்சர்களும், இன்றைய தினம் 8 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

புதிய அமைச்சர்களும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களும் ஒரே பார்வையில்;

அமைச்சர்கள்:

01 – லக்‌ஷசமன் கிரியெல்ல : அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

02 – சரத் அமுனுகம – விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரியம் அமைச்சர்

03 – எஸ். பி. நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்

04 – மஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சர்

05 – துமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

06 – பி. ஹெரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சர்

07 – கபீர் ஹாஷிம் – அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்

08 – ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

09 – தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

10 – பைஸர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்

11 – விஜித விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்

12 – டி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்

13 – சாகல ரத்னாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

14 – மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

15 – தயா கமகே – சமூக நலம் மற்றும் ஆரம்ப தொழிற்முயற்சி அமைச்சர்

16 – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

17 – ரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

18 – விஜேதாஸ ராஜபக்ஷ – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்:

01. பாலித ரங்கே பண்டார : நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்.

02. திலீப் வெதரச்சி : கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

03. எம்.எல.ஏ.எம். ஹிஸ்புல்லா : நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

04. மொஹான் லால் குரேரு : உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

05. சம்பிக பிரேமதாச : தோட்டத் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்

06. லக்ஷ்மன் செனவிரட்ன : பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்

07. ஸ்ரீயானி விஜேவிக்கிராம : விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர்

08. வீரகுமார திசாநாயக்க : மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள் விபரம்:

01. அமீர் அலி : மீன்பிடி மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர்

02. துனேஷ் கன்காந்த : காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

03. ரஞ்சன் ராமநாயக்க : சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

04. கருணாரத்ன பரணவிதான : விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர்

05. சாரதி துஷ்மந்த : நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

06. பாலித குமார தெவவரப்பெரும : நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்

07. மானுஷ நாணயக்கார : தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

08. முத்து சிவிங்கிங்கம் : உள்துறை மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

09. அலி ஸாஹிர் மௌலானா : தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்

10. எச்.எம்.எம். ஹரீஸ் : பொது நிர்வாகம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

Leave a comment