கண்டி கலவரம் – அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவுக்கு மீண்டும் விளக்கமறியல்

430 0

அண்மையில் கண்டி நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளான மஹாசென் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கும் எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு தெனியாய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாசென் பலகாய அமைப்பின் தலைவரான அமித் வீரசிங்க எனும் சந்தேக நபரை, கலவரத்தின் பின்னர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்ததுடன், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இவர் வழிநடத்தியமையினை நிரூபிக்கும் வகையிலான காணொளிகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a comment