நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சரவைச் சீர்திருத்தம் தீர்வல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பும் புதிய அமைச்சரவை நியமனமும் நகைச்சுவையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

