நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமாயின், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள 20 திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

