பாராளுமன்ற 2ஆம் அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு முப்படையினர் ஒத்திகை

314 0

பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை ஆரம்பிக்கும் நிகழ்வு தொடர்பில் முப்படையினரின் விசேட ஒத்திகையொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக திஸாநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இக்கூட்டத்தில் முப்படையினதும் பொலிஸினதும் பாராளுமன்ற சகல பிரிவினதும் பிரதானிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.

ஆரம்ப நிகழ்வுக்கு முப்படை மற்றும் பொலிஸ் பிரிவு என்பவற்றிலிருந்து சுமார் 1000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாவும் அவ்வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

Leave a comment