இலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உபகுழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எப்போது குறித்த பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறக்குமதி பால்மாக்களின் விலைகள் ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

