மண்சரிவு காரணமாக பதுளை அருகே போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரகலை, ஹல்தும்முல்லை, மன்தென்ன, மாரகய மற்றும் கினிகத்கல ஆகிய பிரதேசங்களுக்கான நெடுஞ்சாலைகளே மண்சரிவினால் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதையில் தேங்கியுள்ள மண்ணை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மண்சரிவின் காரணமாக கினிகத்கல மற்றும் கிரிமெட்டிய ஆகிய கிராமங்கள் போக்குவரத்து வசதிகள் இன்றி முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

