குவைட்டிலிருந்த 6750 இலங்கையர்கள் வெளியேற்றம்- தூதரகம்

283 0

குவைட் அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்புக் காலப் பகுதியில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருந்த 6750 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இப்பொது மன்னிப்புக் காலப் பகுதியில் மற்றும் சிலர் வீசா வழங்கப்பட்டு அந்நாட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக குவைட்டில் தங்கியுள்ளவர்களை வெளியேறுவதற்கு குவைட் அரசாங்கம் கடந்த ஜனவரி 29 முதல் பெப்ருவரி 22 வரையான காலப்பகுதியை பொது மன்னிப்புக் காலமாக அறிவித்திருந்தது.

பின்னர் இக்காலப் பகுதி இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் ஏப்றல் 22 வரை நீடிக்கப்பட்டிருந்ததாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment