வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, நாளை (28) தொடக்கம் இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
களுத்துறை தெற்கு, வெயங்கொடை, அநுராதபுரம், அலுத்கம, அவிசாவளை மற்றும் ரம்புக்கணை ஆகிய இடங்களுக்கு விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது

