காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

219 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து கருப்பு சட்டையை அணியப் போவதாக சரத்குமார் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் தலைமை நிலைய செயலாளர் பாகிரதி, பொதுச்செயலாளர்கள் சண்முகசுந்தரம், சேவியர், ஈஸ்வரன், இளைஞர் அணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணி, வர்த்தக அணி செயலாளர் என்.ஆர்த்தி, என்.ஆர்.பி.ஆதித்தன், வக்கீல் குமார், விவேகானந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment