அம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி)

17322 46

அம்பாறையிலுள்ள காரைதீவு ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, இன்று பாற்குட பவனி நடைபெற்றது.

ஆலய பிரதம குருக்களான ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களின் தலைமையில் பாற்குட பவனி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி, காரையடிப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்ததும் ஆலயக்குருக்களான மகேஸ்வரக் குருக்களால் பாலாபிசேகம் செய்யப்பட்டது.

பாற்குடபவனியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்ணடியார்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment