பேருந்து விபத்தில் 29 பேர் வைத்தியசாலையில்

199 0

ஹட்டனில் இருந்து ஒல்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 29 பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) மாலை 03.30 மணி அளவில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

ஹட்டனில் இருந்து ஒல்டன் பகுதியை நோக்கி பயணித்த பேருந்தின் தடையாளி முறையாக இயங்காமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 29 பேரும் டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment

Your email address will not be published.