அத்தனகல்ல கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

7319 23

நிட்டம்புவ, அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெறுவதற்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அத்தனகல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் எனவும், இவர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிட்டம்புவ, அத்தனகல்ல விகாரைக்கு அருகில் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹெய்யின்துடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பிரபல வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment