இன்றும் கடல் கொந்தளிப்பாக்க காணப்படும்

11818 0

நாளை வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் கடல் அலைகள் சிறியளவில் நிலப்பகுதிகளுக்கும் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசத்தில் காற்றானது தெற்கு தொடக்கம் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் மேற்கு தொடக்கம் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும்

Leave a comment