உதயங்கவை இலங்கையிடம் கையளிப்பதில் சிக்கல் ?

408 0

கடந்த  மாதம் துபாயில் கைதுசெய்யப்பட்ட ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் கையளிப்பதற்கு துபாய் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை உதயங்கவை பொறுப்பேற்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனினும் அது வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் உதயங்க வீரதுங்க கடந்த மாதம் துபாயில் கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் உதயங்கவை கைதுசெய்திருந்தனர்.

மிக் விமானக்கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையையும் பிறப்பித்திருந்தது.

உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்ட பின்னர் அவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, உதயங்கவை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மற்றுமொரு குழுவை  துபாய்க்கு அனுப்பவுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Leave a comment