பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதுடைய இளைஞரும் 24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களின் சடலம் தற்போது களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

