விசாரணைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

207 0

உடுகம பொலிஸ் நிலையத்தில், பெண்ணொருவர் செய்திருந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தாக்குதலுக்கு இலக்காகி உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்த பெண்ணே, விசாரணைக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், கெப்பிட்டியாககொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணியில் குப்பை கொட்டப்படுவதாக தெரிவித்து, குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a comment