ம் திகதி தொழி­லாளர் தினத்தை கொண்டாட 19 தொழிற்­சங்­கங்கள் தீர்மானம்

220 0

சர்­வ­தேச தொழி­லாளர் தின­மான மே மாதம் முதலாம் திகதி சர்­வ­தேச மே தினக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு 19 தொழிற்­சங்­கங்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக பொதுச் சொத்­துக்கள் மற்றும் மனித உரி­மைகள் பாது­காப்பு சங்­கத்தின் செயற்­பாட்­டாளர் சில்­வெஸ்டர் ஜய­கொடி தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மே முதலாம் திகதி மு.ப. 11 மணிக்கு கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக மே தினக் கூட்­டங்கள் இடம்­பெறும். அர­சாங்கம் மே தினக் கூட்­டங்­களை மே மாதம் 7 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளதை எம்மால் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

மே மாதம் முதலாம் திகதி தொழி­லாளர் தினக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு மைதா­னத்தைக் கோரி கொழும்பு மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­யி­ருந்தோம். எனினும் மாந­கர சபை ஆணை­யாளர் மே முதலாம் திகதி மைதானத்தை தர முடி­யாது என தெரி­வித்­துள்ளார். அதற்­கான கார­ண­மாக மா­நா­யக்க தேரர்­களின் வேண்­டு­கோ­ளுக்கிணங்க சர்­வ­தேச ரீதியில் மே மாதம் முதலாம் திகதி கொண்­டா­டப்­படும் தொழி­லாளர் தினத்தை மே மாதம் 7 ஆம் திகதி கொண்­டா­டு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. எனவே அத்­தி­னத்தில் மைதா­னத்தை வழங்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

எவ்­வா­றி­ருப்­பினும் மா­நா­யக்க தேரர்­களின் தேவைக்­கேற்ப மே தினத்தை ஒத்­தி­வைப்­ப­தாக இருந்தால் நாட்டில் அர­சாங்கம் எதற்கு? இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு திட்டமிட்டபடி மே மாதம் முதலாம் திகதி மே தினத்தை அனுஷ்டிப்போம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a comment