பண்டிகைக் கால ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

225 0

பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலப்பதியில் இந்த இலாபம் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே.இத்திபொலகே தெரிவித்துள்ளார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை வருமானம் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் மீண்டும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஆறு கோடி ரூபாவிற்கும் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் பயணிகளின் நலன் கருதி தொடர்ந்தும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment