விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விடுதலை செய்யப்படவில்லை- புலனாய்வு அமைப்பு மறுப்பு

7 0

இலங்கை சிறையில் தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என  வெளியாகியுள்ள செய்திகளை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான மொறிஸ் என்பவர் விடுதலை செய்யபபட்டுள்ளார் என்ற தகவலையே அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டுஅம்மானின் நெருங்கிய சகாவான மொறிஸ்  இலங்கை சிறைச்சாலையொன்றில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பல முக்கிய தாக்குதல்களின் சூத்திரதாரி இவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர் விடுதலையாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை புலனாய்வு அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் ஆங்கில இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Post

சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப்

Posted by - March 7, 2017 0
நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கெஷாப், சந்தித்து குசலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி…

வவு: பத்தினியார் மகிளங்குளத்தில் கொலை :05 பேர் கைது

Posted by - November 22, 2016 0
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களக்கு மஹிந்த ராஜபக்ஷ நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் -சி.பி.ரத்னாயக்க

Posted by - December 4, 2018 0
இடைக்கால அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்காதிருந்திருந்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களக்கு மஹிந்த ராஜபக்ஷ நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். பொதுஜன…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Posted by - June 26, 2017 0
இலங்கையின் வரி வருமானத்தில் 80 வீத பங்கை செலுத்தி வரும் மறைமுக வரிகளை 60 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர…

இலங்கை அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர சீனா பயணம்

Posted by - February 27, 2018 0
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 5…

Leave a comment

Your email address will not be published.