செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி

12 0

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன.

இதேவேளை பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரசைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மனி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்கு கிடைக்கப் பெற்றன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்கு 6 வாக்குகளும் தமிழர் விடுதலைக் கூட்டனியைச் சேர்ந்த டெல்சனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்
வாக்களித்தது.

பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் கிடைக்கப் பெற்றன.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித்தவிசாளர் ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Post

மினுவாங்கொடயில் கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!

Posted by - May 5, 2018 0
மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.…

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 15, 2017 0
அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸ…

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - December 1, 2016 0
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊர்வலமும் இன்று இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்…

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு

Posted by - January 10, 2018 0
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா? என ஆராய்ந்து பார்க்க 5 பேர்கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியஸாத் டெப்,…

கிராண்ட்பாஸ் பகுதியில் 3 யுவதிகள் மாயம்

Posted by - October 18, 2017 0
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் காணாமல் போன 3 கொலன்னாவை யுவதிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்த காவற்துறையினர் தீர்மானித்துள்ளனர். அவ்வாறு காணாமல் போன யுவதிகளில் ஒருவரிடம் இருந்து…

Leave a comment

Your email address will not be published.