இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

7 0

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாதனை

Posted by - September 28, 2017 0
இலங்கை அணியுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் ஸா குறைந்த…

‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ – கால்நடை வளர்ப்போருக்கு ஜின்பிங் வேண்டுகோள்

Posted by - October 30, 2017 0
அருணாசல பிரதேச எல்லையில் ‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ என சீனாவின் அதிபர் ஜின்பிங் கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகாரர் கைது

Posted by - January 23, 2019 0
ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத்…

பிரேசில் அணை உடைப்பில் பலி 40 ஆக உயர்வு – ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்!

Posted by - January 27, 2019 0
பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. …

தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா?  – உச்ச நீதிமன்றம் கேள்வி 

Posted by - August 18, 2017 0
தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா? என்று கேட்டுள்ளது. முகலாய மன்னர்…

Leave a comment

Your email address will not be published.