சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

9 0

ரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

சிரியா மீது கடந்த 13-ந்தேதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா ராணுவம் அங்கு ரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70 பேர் பலியாகினர்

அதற்கு முடிவுகட்டும் நோக்கத்தில் அதிபர் ஆசார் -அல்-ஆசாத்துக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ரசாயன ஆயுத கிடங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிலைகளை குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

சிரியா மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க்கில் யூனியன் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு குண்டு விச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் நியூயார்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் கியூன்ஸ் கல்லூரி பேராசிரியர் லார்டன் பிரான்ஸ் கலந்து கொண்டார். அவர் கூறும் போது, அமெரிக்காவின் ராணுவ தாக்குதலால் சிரியாவில் பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே இத்தாக்குதலை எதிர்க்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவது இது ஒரு உதாரணம் ஆகும்.

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை ஆதரிக்கிறேன். சிரியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் அகதிகள் வருவதற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். தற்போது நடத்தப்பட்டுள்ள குண்டு வீச்சில் அப்பாவி பொது மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்’’ என்றார். இதே கருத்தை போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்தனர்

Related Post

ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி – ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு

Posted by - June 22, 2018 0
ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். 

சோனியா காந்தியின் மருமகனுக்கு 2-வது முறையாக சம்மன் !

Posted by - December 1, 2018 0
நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது.

கல்யாணம் எப்போது? என்று கேட்டதற்காக கர்ப்பிணியை கொன்ற வாலிபர்

Posted by - February 8, 2018 0
கல்யாணம் எப்போது என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

ஒலிம்பிக்கில் போட்டியில் வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Posted by - August 6, 2016 0
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மால்டாவில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார் வெங்கையா நாயுடு

Posted by - September 17, 2018 0
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார்.

Leave a comment

Your email address will not be published.