லண்டனில் தமிழர் புதுவருட நிகழ்வில் பங்கேற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்!

1712 0

பிரித்தானியா லண்டனில் நேற்று நடைபெற்ற தமிழ் புதுவருட பிறப்பு நிகழ்வில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றார்.

கொன்சவேட்டிவ் கட்சியின் போல் ஸ்கலி மற்றும் கிங்ஸ்டன் சபையின் தலைவர் கெவின் டேவிஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

இந்த நிகழ்வு, ஸ்டொன்லிக் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கலி, பிரதமர் தெரேசா மேயின் புதுவருட செய்தியை அறிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டு மனித உரிமை மீறல் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இலங்கையர்கள் அனைவரும் தமது நாட்டுக்கு திரும்பவேண்டும்.

அங்கு சென்று அவர்கள் சுதந்திரமாக முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பிரித்தானியா, நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிகழ்வில் பங்கேற்ற கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் கெவின் டேவிஸ், இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கும் ரோயல் போரோ கிங்ஸ்டனுக்கும் இடையில் 9 மாதங்களுக்கு முன்னர் செய்துக்கொள்ளப்பட்ட ‘டுவினிங்’உடன்படிக்கை தொடர்பில் பேசினார்.

இந்த வாரத்தில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தாம் வடக்கின் முதலமைச்சருடன் தொடர்புக்கொண்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் தென்மேற்கு லண்டனின் வர்த்தகக்குழு ஒன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

அந்தக்குழு, யாழ்ப்பாணத்துடன் வர்த்தகம், கல்வி, உட்பட்ட பல விடயங்களில் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளது என்றும் கெவின் டேவிஸ் குறிப்பிட்டார்.

Leave a comment