கிரிந்திவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேயங்கொட, புளத்வெல்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 20 வயதுடைய இளைுனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

