அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் சிரியாவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் மூன்றில் ஒரு பகுதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சிரியாவின் இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகள் வானில் வைத்தே எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்டு தாக்கியழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்க, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் போது பொது மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது தனது பிரதான இலக்காக காணப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யாவின் ஆதரவு சிரியா அரசாங்கத்துக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

