குற்ற விசாரணை வளையத்தில் டிரம்ப் வக்கீல் – அமெரிக்க நீதித்துறை அறிவிப்பு

246 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் குற்ற விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன். சமீபத்தில் இவரது அலுவலகங்களில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினர் (எப்.பி.ஐ.) அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

எப்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இது நாட்டின் மீதான தாக்குதல் என அவர் விமர்சித்தார்.மேலும், மைக்கேல் கோஹன் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதில் இருந்து தடுக்க அவரது வக்கீல் முயற்சிகள் மேற்கொண்டார் என தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் மைக்கேல் கோஹன் தொடர்பான வழக்கு, நியூயார்க் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் குற்ற விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. அவர் பல மாதங்களாக விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அரசு தரப்பு வக்கீல் டாம் மெக்கே குறிப்பிடுகையில், “மைக்கேல் கோஹன், டிரம்பின் சட்ட வாடிக்கையாளர் என்ற சலுகையை வாள்போல பயன்படுத்தி, சாட்சியங்களை ஆராயும் அரசின் திறனை முடக்க பார்த்தார்” என குறிப்பிட்டார்.

வக்கீல் மைக்கேல் கோஹனின் தொழில் தொடர்புகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.தனது வக்கீல் குற்ற விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு இருப்பது டிரம்புக்கு தலைவலியாக அமைந்து உள்ளது.

Leave a comment