உடுவில் பாடசாலை மாணவிகளின் போராட்டம் மல்லாகம் நீதவானின் தலையீட்டால் முடிவு (வீடியோ,படங்கள்)

618 0

img_0336கடந்த சில நாட்களாக உடுவில் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவந்த போராட்டம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று காலை முதல் குறித்த பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறித்த பாடசாலையில் புதிய அதிபர் பதவியேற்றதை அடுத்து மாணவிகள் மேற்கொண்ட போராட்டத்தினை அடக்குவதற்காக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் அங்கு இன்று பதற்றம் ஏற்பட்டிருந்தனது.
இந்நிலையில் மாணவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டிருந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் ஏ.யூட்சன் பாடசாலை நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் குறித்த பாடசாலையில் இனி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதற்கான தடையுத்தரவினை பிறப்பித்திருந்தனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுட்பட மாணவர்கள் இனிவரும் காலங்களில் புதிய அதிபர் நிர்வாகத்தில் அச்சுறுத்தப்பட்டு, பழிவாங்கப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். இதனையடுத்து குறித்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.