இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது-தீர்மானத்தை வரவேற்ற எச்.ராஜா (காணொளி)

509 0

rajahஇந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று, இந்தியாவின் காஸ்மீர் பிரச்சனை குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியமை வரவேற்கதக்கது என்று, பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் உத்திரக்கோசமங்கையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த பாரதீஜ ஜனதாக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட எச்.ராஜா,
காஸ்மீர் பிரச்சனை குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கதக்கது. இதன் மூலம் காஸ்மீர் விவகாரத்தில் நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்து இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இராணுவத்தை விமர்சிப்பது தவறான செயல். காஸ்மீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான முறையை கடைபிடிக்கின்றது. சுதந்திர தினத்திற்கு பின்பு பாகிஸ்தான்-காஸ்மீரை பற்றி பேசுவதே இல்லை. மேலும் காவேரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கதக்கது. அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகுதான் தண்ணீர் தருவோம் என்று கர்நாடகா சொல்வது தவறு என்று மேலும் தெரிவித்தார்.