பாராளுமன்றத்திலுள்ள சகல குழுக்களும் ரத்து

492 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ரத்து செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் அடியாக, பாராளுமன்றத்தில் செயற்பட்டு வந்த சகல குழுக்களும் ரத்தாவதாகவும், புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தவுடன் புதிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அரசியல் யாப்பு நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழு (கோப்), அரச கணக்கீட்டுக் குழு, அமைச்சுக்களுக்கான மேற்பார்வைக் குழு மற்றும் பாராளுமன்றத்திலுள்ள தெரிவுக் குழுக்கள் அனைத்தும் ரத்தாவதாகவும் அரசியல் நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் 70 ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment