மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெர்பச்சுவல் ட்ரசரிஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

