எதிர்வரும் 26 ஆம் திகதி வெசாக் வாரம் ஆரம்பம்!

235 0

அர­சாங்­கத்தின் வெசாக் பண்­டிகை இம்­முறை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் குரு­ணா­கலில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதன்படி எதிர்­வரும் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை வெசாக் கால­மாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

இம்­முறை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள அரச வெசாக் பண்­டிகை 2562 ஆம் ஸ்ரீ பௌத்த வரு­டத்­திற்­கா­ன­தாகும். இவ்­வ­ருடம் நடை­பெறும் அரச வெசாக் பண்­டிகை குரு­ணா­கலில் அமைந்­துள்ள வர­லாற்று முக்­கி­ய­த்து­வ­மிக்க தேவ­கிரி ரஜ­மஹா விகா­ரையை மைய­மாக கொண்டு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வுகள் இம்­மாதம் 26ஆம் திகதி ஆரம்­ப­மாகி மே மாதம் 2 ஆம் திகதி முடி­வ­டையும்.

அரச வெசாக் தினத்­துடன் இணைந்த வகையில் வெசாக் கிரி­யை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன் பல நிகழ்ச்­சி­களை நடத்து வதற்கும் அரசாங்கம் உத்தே சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment