உயர் கல்வியை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி

315 0

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான புதிய சட்டத்தின் மூலம் உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தின் மூலம் அனைத்து பல்கலைக்கழக கல்விகளும் தனியார் மயப்படுத்தப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment