சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

203 0

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்­வே­று­பட்ட கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என அவ்­வெ­திர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்தன தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த மூன்று ஆண்­டு­களில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தேசியப் பிரச்­சினை தொடர்பில் பேச­வில்லை. அவர் வடக்கு, கிழக்­கி­லுள்ள பிரச்­சினை குறித்தே கனவம் செலுத்­து­கிறார்.ஆகவே அவர் எதிர்க்­கட்சித் தலை­மைக்குப் பொருத்­த­மற்­றவர்.

மேலும் கிழக்கு, வட­மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகாண சபை­களின் பதவிக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. அம்­மா­காண சபை­களின் அதி­காரம் தற்­போது மாகாண ஆளு­நரின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை எதிர்­வரும் மே மாத­ம­ளவில் நடத்­து­வ­தாக அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. ஆகவே பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்டும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டு­வ­தனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு அர­சாங்கம் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வந்­தது. எனினும் அம்­மு­றையின் மூலம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்­களை அதிர்ஷ்­ட­லாபச் சீட்டு மூலம் தெரி­வு­செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

எனவே எந்­த­வொரு கார­ணங்­க­ளையும் அடிப்­ப­டை­யா­கக்­கொண்டும் மாகாண சபைத் தேர்­த­லைப்பிற் போடக்­கூ­டாது. பழைய (விகி­தா­சார) முறை­யி­லா­வது மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்டும். அத்­துடன் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தல­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டு­வது உறுதி. தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வதன் மூலம் அர­சாங்­கத்­தின தோல்­வியே வலுப்­பெ­று­கி­றது.

அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து கூட்டு எதிர்க்­கட்சி அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக எவ­ரா­வது குறிப்­பி­டு­வார்­க­ளாயின் அது உண்மைக்குப் புறம்பானதாகும். அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ண, நிமல் சிறிபால டி. சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனேயே தாம் பேச்சுவா ர்த்தை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.

Leave a comment