13 ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர்களும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை

276 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்தில் 13  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொள்ளவில்லையென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் மாத்திரம் கலந்து கொண்டுள்ளனர். இந்த  அமைச்சரவை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம்  இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தீர்மானம் ஒன்றுக்கு வரும் வரையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment