முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

7 0

முல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியொன்றில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா இரவிகரன் கடந்த மாகாண சபை அமர்வில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று காலை முல்லைத்தீவுக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இதற்கமைய முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு சென்று, அங்கு இடம்பெறும் பணிகள் குறித்து காணி உரிமையாளருடன் கேட்டறிந்தனர்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் து.இரவிகரன் அப்பகுதியிலுள்ள நிலைமைகள் தொடர்பில் ஏனைய உறுப்பினர்களுக்கு விளக்கியதோடு, ஒருதொகுதி உறுப்பினர்கள் விகாரையின் விகாராதிபதியுடனும் கலந்துரையாடினர்.

Related Post

யாழ் கந்தர்மடம் பகுதியில் கோர விபத்து!! மருத்துவர் மயிரிழையில் தப்பினார்

Posted by - August 4, 2017 0
சற்று முன்னர் யாழ். கந்தர்மடம், ஆத்திசூடிப் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிர் தப்பினார்

3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Posted by - October 31, 2016 0
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி…

யாழ்ப்பாணம் இளவாலையில் உந்துருளி விபத்து !உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 6, 2017 0
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும்  மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று…

திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் சிலை மீட்பு!

Posted by - May 16, 2017 0
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை…

மீண்டும் விடுதலைப்புலிகளா? பேரதிர்ச்சியில் பொலிஸ் ,இராணுவம்

Posted by - January 2, 2019 0
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக…

Leave a comment

Your email address will not be published.