04 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

341 0

கிளிநொச்சி – அநுராதபுரம் மார்க்கத்திலான பஸ் ஒன்றில் இருந்து 05 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

04 கிலோவும் 25 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா தொகையை சந்தேகநபர் கொண்டு செல்லும் வழியில் நேற்று அவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 02 கேரளா கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மல்லாவி செல்வபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment