பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது

337 0

palali-airportபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய அதிகாரசபை, சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இதன்படி புனரமைப்புக்குத் செலவாகும் நிதி மற்றும் அதன் வரைபினையும் அக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், தற்போது பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது எனவும், அதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தேசிய கொள்கைகள் தொடர்பான பிரதிஅமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவிக்கையில்,

பலாலி விமானநிலையம் புனரமைப்புச் செய்வதற்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுவதோடு, இதற்கு காணிகளும் தேவைப்படுகின்றது. ஆகையால் இதனை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் திட்டம் அரசாங்கத்திற்கு இப்போது இல்லையெனவும் அத்துடன்  பலாலி விமானநிலையத்தை விரிவாக்கும் திட்டம் எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.