.
வெசாக் மற்றும் பொசோன் போயா தினங்களில் அன்னதானம் வழங்குவதிலும், தோரணம் அமைப்பதிலும் எந்தவித தடையையும் அரசாங்கம் விதிக்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் அன்னதானம் வழங்குவதில் எந்தவொரு தடையும் இல்லையெனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொசோன் போயா தினங்களில் அன்னதானம் வழங்குதல், தோரணம் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டதாக தெரிவித்து சில ஊடகங்களில் பொய்யான செய்திகள் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

