ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஒருநாள் விவாதமொன்றிற்காக கூடிய அளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும் என பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி குறித்த விவாதம் எதிர்வரும் 4ம் திகதி காலை 9.30 முதல் இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய விவாதத்திற்கு நேரம் தேவைப்படுமாயின் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரித்துள்ளார்.
விவாதத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் சமமான நேரம் வழங்கப்படும் எனவும் விவாதத்தின் வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையிலன்றி பழைய முறையிலேயே நடாத்தப்படும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

