காலி, தடல்லே பகுதியில் பட்டாசு கைத்தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தயார் படுத்தப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவும் போது தொழிற்சாலையில் ஐவர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைப்பதற்கு நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

