உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் துப்பாக்கியை வைத்திருந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 45 மற்றும் 55 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

