வடமாகாண முதலைமைச்சரை சந்தித்தார் இராணுவத் தளபதி

433 0

இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் ஒரு அங்கமாக குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் பாதுகாப்பு தரப்பின் கீழ் உள்ள வடமாகாண மக்களின் காணிகளை விடுவித்தல், வடமாகாண பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை இராணுவத்தின் உதவியுடன் மேம்படுத்தல் மற்றும் வடமாகாண பாதுகாப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு படையினர் வசம் உள்ள காணிகளில் ஒரு பகுதியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment