கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று (29) காலை உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் மார்ச் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

